2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அட்லியின் அலப்பறை

J.A. George   / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதை அடுத்து அந்த படம் 2000 கோடி வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்மையில் அளித்த பேட்டியில் அட்லி கூறியபோது, ‘விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் இணைத்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சீரியசாக ஒரு திட்டத்தை போட்டு வருகிறேன்.

இருவருக்கும் பொருத்தமான கதையையும் தேர்வு செய்து வருகிறேன். அனேகமாக அது எனது அடுத்த படமாக கூட இருக்கலாம். விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவருமே எனது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் எனக்கு ஊக்கத்தையும் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

எனவே அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X