J.A. George / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் அண்மையில் நடிகையாக அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சிம்புவின் அடுத்த திரைப்படமான ’கொரோனா குமார்’ என்றத் திரைப்படத்திலும் அதிதி ஷங்கர் தான் நாயகி என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நடிகையை அடுத்து இன்னொரு துறையிலும் கால் வைத்துள்ளதாக அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இசையமைப்பாளர் தமன் இசையில் ஒரு பாடலை பாடி இருப்பதாக அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார்.
வருண்தேஜ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘கானி’ என்ற திரைப்படத்தில் இடம்பெறும் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை பாடியிருப்பதாகவும், என்னை நம்பி இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் தமனுக்கு தனது நன்றி என்றும் அதிதி ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற தமன், தற்போது ஷங்கர் மகளுக்கு தான் இசையமைக்கும் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago