2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

அதுல்யாவின் எச்சரிக்கை

Editorial   / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'காதல் கண் கட்டுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அதுல்யாவின் பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, அதிலிருந்து அவரின் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி சென்றிருப்பதாக நடிகை அதுல்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எனவே,  தன்னுடைய பெயரில் உள்ள போலி பேஸ்புக் கணக்குக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறும் ட்விட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது தன்னுடைய பெயரில் பேஸ்புக்கில் போலியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து, தனிப்பட்ட முறையிலும், திரையுலகிலும் தனக்குத் தெரிந்த நபர்களுக்கு ஏன் செய்தி அனுப்புகிறார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என பதிவிட்டுள்ள அவர்,  இது மிகவும் மோசமான செயல். ஏற்கனவே இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .