Editorial / 2025 ஜூன் 17 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘தங்கல்’ படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்தவர் இந்தி நடிகை பாத்திமா சனா ஷேக். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ள அவர், சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், திரைத்துறையில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியிருந்தார்.
தென்னிந்திய படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, “சில ஹைதராபாத் தயாரிப்பாளர்கள், படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, ‘அதை செய்வீர்களா, இதை செய்வீர்களா?’ என்று கேட்டார்கள். ஆனால், எதையும் நேரடியாகக் கேட்காமல் தங்கள் நோக்கங்களை வெளிப் படுத்தினார்கள். அதனால் அங்கு நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன்” என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது.
இந்நிலையில் இதற்கு பாத்திமா சனா ஷேக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் கூறியது தேவையில்லாமல் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற விஷயங்களைக் கடந்துதான் செல்கிறார். ஒரு பெண் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவர் கேலி செய்யலாம். இது எல்லா இடங்களிலும் எல்லாத் துறையிலும் உள்ளது. என் வார்த்தைகள் ஏன் பெரிதாக்கப் பட்டன என்று தெரியவில்லை. அது நடந்த ஒன்று. அதைச் சமாளித்து முன்னேறிவிட்டேன். என்னிடம் அப்படிக் கேட்டவர், ஒரு சிறிய தயாரிப்பாளர் அல்லது காஸ்டிங் இயக்குநராக இருக்கலாம். மொத்த தென்னிந்தியத் துறையும் அப்படி இல்லை. அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago