2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அத்வானிக்கு கல்யாணமா?

Editorial   / 2023 ஜனவரி 02 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கியாரா அத்வானிக்கு பிரபல நடிகருடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. 2014ஆம் ஆண்டு வெளியான ஃபக்ளி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கியாரா அத்வானி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் என்ட்ரி கொடுத்த கியாரா அத்வானி, இந்தி தெலுங்கு என கலக்கி வருகிறார்.

சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் மோதிரம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள பிரபல அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X