S.Renuka / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களையும், தைரியமான நடிப்பையும் தெரிவு செய்து, அமைதியாகத் தனது பயணத்தைத் தொடரும் நடிகைகளில் ஒருவர் நடிகை சாய் தன்ஷிகா.

‘பேராண்மை’ படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர், இன்று ஆக்சன் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தும் நடிகையாக வளர்ந்துள்ளார். வித்தியாசமான கதைகளில் நடிக்கத் தயங்காத அவரது அணுகுமுறையே, அவரை மற்ற நடிகைகளிலிருந்து தனியாக அடையாளப்படுத்துகிறது.
இந்த நிலையில், நடிகை சாய் தன்ஷிகா தற்போது நடித்துள்ள புதிய படம் ‘யோகிடா’. இந்த படத்தைக் கவுதம் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். பெண்களை மையமாக கொண்டு, ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், தற்போது திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் இந்த படத்தின் முக்கியத்துவம் குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘யோகி’. அப்படித்தான் இந்த ‘யோகிடா’ ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்திலிருந்தது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் சீன்கள் இந்த படத்திலும் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.
கபாலி படம் வெளியான போது, அதற்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, அந்த படத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் தங்களது முடியை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் பொதுவாக தங்களது முடியை மிகவும் முக்கியமானதாக நினைப்பார்கள். ஆனாலும், அந்த கதாபாத்திரம் அவர்களை அந்த அளவுக்கு பாதித்தது. ஒரு படம் எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.
32 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago