Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 05 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில், 80களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த குஷ்பூ, இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மும்பையை பூர்வீகமாக கொண்டவ குஷ்பூ, தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்டுள்ளார்.
அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையிலும் சிறந்து விளங்கிய குஷ்புவின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன.
பெரிய திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கால் பதித்து பிரபலமடைந்த அவர், அரசியலிலும் சாதித்து வருகின்றார்.
இந்நிலையில், குஷ்பூ கணவரின் இயக்கத்தில் வெளியான ‘அன்பே சிவம்’ திரைப்படத்தின் காரணமாக அவர்களது மகளுக்கு நேர்ந்த நல்ல விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது, அன்பே சிவம் திரைப்படம் வெளியான சந்தர்ப்பத்தில், குஷ்பூ- சுந்தர்.சி தம்பதியினர் தம் மகளுக்கு சென்னையில், மிகவும் பிரபலமான பாடசாலையில் அனுமதி கேட்க சென்றிருந்தார்களாம். அப்போது, அவர்களைப் பார்த்த அதன் பணியாளர் ஒருவர், அடுத்த மாதம் பாடசாலை ஆரம்பமாக போவதால், நிச்சயம் இங்கு அனுமதி பெற முடியாது என்று கூறினாராம்.
இருப்பினும் தம்மால் முடிந்த முயற்சி செய்து பார்ப்போம் என்று அந்த பாடசாலை அதிபரை சந்தித்தபோது, வடநாட்டைச் சேர்ந்தவரான அவர், அனுமதி கிடைப்பது கடினம் என்பது போல் பேசியுள்ளார்.
பின்னர், இவர்கள் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என அறிந்து, சினிமா பற்றி சாதாரணமாக பேசியுள்ளார்.
அப்போது, “ஏன் தமிழில் நல்ல படங்கள் அடிக்கடி வருவதில்லை. எப்போதாவதுதான் வருகிறது. சமீபத்தில் ‘அன்பே சிவம்;’ படம் பார்த்தேன். அதுமாதிரியான படங்கள் அதிகம் வர வேண்டும்”என்று கூறியிருக்கிறார்.
உடனே குஷ்பூ அவரிடம், ‘அந்த திரைப்படத்தின் இயக்குநரே இவர்தான்’ என்று சுந்தர்.சியை கைகாட்டியுள்ளார்.
உடனே ஆச்சரியமடைந்த அதிபர், “என்னது நீங்கள்தான் அத்திரைப் படத்தின் இயக்குநரா? இப்படியொரு சிறந்த திரைப்படத்தின் இயக்குநருக்கு எப்படி அனுமதி இல்லை என்று சொல்ல முடியும்?” என கூறி, உடனே அவர்களுக்கு அனுமதி அளித்தாராம்.
இந்த சம்பவம் பற்றி, இயக்குனர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
45 minute ago
1 hours ago