Freelancer / 2024 ஜூன் 17 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிந்து சமவெளி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலாபால் . அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான மைனா படம் ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார்.
இயக்குனர் ஏ.எ.ல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், தன்னுடைய கர்ப்பத்தை கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 11ம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாகவும் தற்போது குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது அறை அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அவர் தன்னுடைய குழந்தையுடன் அந்த அறைக்குள் நுழைந்து சர்ப்ரைஸ் ஆவதாக அந்த வீடியோவில் காணப்பட்டது.
தன்னுடைய குழந்தைக்கு “இலை(ILAI) என்று பெயரிட்டுள்ளார் அமலா பால். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .