J.A. George / 2022 மார்ச் 01 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் 2001ஆம் ஆண்டு விஜய் நடித்த “பத்ரி” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா. “ரோஜா கூட்டம்” திரைப்படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்தார்.
“சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இதன் மூலம் பல ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.
அத்துடன், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்த பூமிகா. 2007-ல் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்மைகாலமாக பூமிகாவுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார். அதாவது, மலையாளத்தில் தயாராகும் “பட்டர்பிளை” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு அம்மாவாக நடிக்கிறார்.
விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக வந்தவர் தற்போது, அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் பரபரப்பாக பேசுகின்றனர். தாய், மகள் பாசத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாராகிறது.
15 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
17 Jan 2026
17 Jan 2026