Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரம் ரஜினிகாந்த் தமது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு பேசிய ரஜினி "கட்சி வேறு; ஆட்சி வேறு. 48 வயதுக்கு உட்பட்டவருக்கே கட்சியில் முக்கிய பொறுப்பு. தனக்கு முதல்வர் நாற்காலியில் அமர ஆசை இல்லை!’’ என்று பேசினார்.
அது தொண்டர்களுக்கு சிறிய ஏமாற்றம் அளித்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி "சில விஷயங்கள் எனக்கு ஏமாற்றமாக உள்ளது" என்று கூறினார். எனவே அன்றாவது ஒரு நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார் ரஜினி. அரசியல் வருகை குறித்து முக்கிய முடிவு சொல்ல இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி எம். ஆர். சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடக்கிறது. இதில் பேசிய ரஜினி "அரசியல் வருகை தெளிவாக இருக்க வேண்டும்
இல்லையென்றால் மீன் குழம்பு வெச்ச பாத்திரத்துல சக்கரை பொங்கல் சமைச்சா மாதிரி இருக்கும். எனக்கு முதல்வர் ஆசை எப்பவும் இருந்ததில்லை.
என்னை முதல்வராகவும் நான் நெனைச்சதில்லை. ஒரு நல்ல ஆட்சிக்கு நான் பாலமாக இருப்பேன். ரஜினி மக்கள் மன்றத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்." என்றும் கூறியுள்ளார்.
8 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago