Janu / 2025 நவம்பர் 19 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலத்தால் அழியாத விழுமியங்களான கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மரைன் படைப் பிரிவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் 250 வருட கால பூர்த்தியை கௌரவிக்கும் வகையில், நவம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த Marine Corps Ball வைபவத்தில், அமெரிக்க மரைன் படைப் பிரிவின் 250 வது பிறந்த நாளினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் கொண்டாடியது.

தூதுவர் ஜுலீ சங் ஏற்பாடு செய்த இவ்வைபவத்தில் முழு இலங்கையையும் சேர்ந்த பங்காளர்கள் மற்றும் இராஜதந்திர அலுவலர்களுடன், பாதுகாப்பு பிரதியமைச்சர்(ஓய்வுபெற்ற)மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற)எயா வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா மற்றும் ஏனைய இராணுவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

2026ஆம் ஆண்டில் அமெரிக்காவானது தனது 250வருட சுதந்திரத்தினைக் கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் இவ் வருட பிறந்த நாள் கொண்டாட்டம் வருவதானது, அமெரிக்கர்கள் போற்றுகின்ற சுதந்திரங்கள், பல தலைமுறைகளாக பாதுகாப்பின் முன் வரிசையில் விசுவாசத்துடன்நின்ற மரைன் படை பிரிவினரால் நிலைத்திருக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது.
இவ்வைபவத்தின்விருந்தினர்உரையினைநிகழ்த்தியமரைன்படைப்பிரிவின்மிகவும்சிரேஷ்ட ஆணை அதிகாரிகளுள் ஒருவரா னChief Warrant Officer Five (CWO5)டேமன் எச். ஹைன்ஸ் கலந்துகொண்டது இக்கொண்டாட்டத்தின் ஒரு விசேட அம்சமாக அமைந்தது. தற்போது கொழும்பில் மரைன் பாதுகாப்பு காவலராக கடமையாற்றும் தனது புதல்வரான Staff Sergeant கிறிஸ்ஹைன்ஸ் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் பங்குபற்றியமையானது ஒரு விசேட அர்த்தத்தினை கொண்டிருந்தது.
மரைன் படைப் பிரிவின் உயர்ந்த இலட்சியங்களை நிலைநாட்டிய மூன்று தலைமுறை மரைன் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது அமைந்திருந்தது. இவ்வைபவத்தின் பாரம்பரியம் மற்றும் மெய்யுணர்வுக்கு ஏற்ப, தூதரக கடமையில் இருக்கும் இரு மரைன் வீரர்களை மீண்டும் படையில் இணைத்துக் கொள்ளும் நிகழ்விற்கு அவர் தலைமை தாங்கினார். அது மரைன் படைப்பிரிவின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்திய ஒரு கௌரவமிக்க நிகழ்வாகும்.
மரைன் படைப்பிரிவின் சிறப்புமிக்க மரபினை கெளரவித்து அங்கு உரையாற்றிய தூதுவர் சங்:“அமெரிக்க மரைன் படைப்பிரிவின் 250 வது ஆண்டை நாம் கொண்டாடுகையில், கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு மரபினை நாம் கெளரவிக்கிறோம். திரிப்போலியின் கடற்கரையிலும், பசிபிக் பெருங்கடலுக்கு அப்பாலும், மற்றும் இன்று உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் அனைத்திலும் மரைன் வீரர்கள் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் கடந்து செல்வதற்கு இந்த விழுமியங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

கொழும்பிலுள்ள எமது மரைன் பாதுகாப்பு வீரர்கள் தினமும் இந்த விழுமியங்களுடன் வாழ்கிறார்கள்.மேலும் அமெரிக்கா தனது 250ஆவது பிறந்தநாளை நெருங்கும் இவ்வேளையில், மரைன் வீரர்கள் எப்போதும் விசுவாசமாக இருப்பதன் காரணமாக நாம் போற்றும் சுதந்திரங்கள் நிலைத்திருக்கின்றன என்பது எமக்கு நினைவூட்டப்படுகிறது.செம்பர் ஃபிடெலிஸ் — எப்போதும் விசுவாசமானவர்” எனக் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை குறிக்கும் வகையில், அமெரிக்க மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்ட 250ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் வெளியிட்ட, பல தலைமுறைகளாக மரைன் படை வீரர்கள் வழங்கும் அசாதாரண பங்களிப்புகளை நினைவுகூரும் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள மரபுகளை தூதரகமும் பிரதிபலிக்கிறது:“இரண்டாவது கண்ட மாநாடானது 1775, நவம்பர் 10ஆம் திகதி தனது தீர்மானத்தின் மூலம் கண்ட மரைன் படையினை நிறுவியபோது, புரட்சியின் தீச்சுவாலைகளில் மரைன் படைப்பிரிவு பிறந்தது.
1776 ஆம் ஆண்டு நஸாவ் நகரில் நடந்த முதலாவது போர் நடவடிக்கை தொடக்கம், போரில் இரக்கமற்றவர்களாகவும், சுதந்திரம் மற்றும் நீதியின் அதிதீவிர பாதுகாவலர்களாகவும் மரைன் படையினர் நிரூபிக்கப்பட்டுள்ளனர்.அத்தருணத்தில் இருந்து, எமது நாட்டின் தலைவிதியினை வடிவமைப்பதற்குமரைன் படையினர் உதவியுள்ளனர்.நியூ ஓர்லியன்ஸ் போரில் ஆண்ட்ரூ ஜாக்சனுடன் இணைந்து அவர்கள் போராடினர், ‘டெவில் டோக்ஸ்’என்ற புனைப்பெயரை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்த, பெல்லவ் வுட்டில் இடம்பெற்ற முதலாம் உலகப் போரின் அகழிகளில் உறுதியாக நின்றனர், மற்றும் குவாடல்கனல், இவோ ஜிமா மற்றும் ஒகினாவா போன்ற பசிபிக் பிராந்தியம் முழுவதும் வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.அவர்கள் கொரியாவிலும் வியட்நாமிலும் கம்யூனிசத்தை எதிர்கொண்டனர்,
பாரசீக வளைகுடாவில் சுய ஆட்சிக்கான உரிமையை நிலைநாட்டினர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாலைவனங்களிலும் மலைகளிலும் எமது எதிரிகளுக்கு நீதியை வழங்கினர்.மரைன் படை வீரர்கள் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்களை பாதுகாக்கிறார்கள், மற்றும் எமது சமஷ்டி சட்ட அமலாக்கப் பிரிவுகள் இங்கு உள்நாட்டில் தமது பணிகளைச் செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறார்கள். சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், மரைன் படையினர் வலிமை, துணிச்சல் மற்றும் அடிபணியாத கௌரவத்துடன் பதிலளித்துள்ளனர்.”

54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago