2025 நவம்பர் 19, புதன்கிழமை

திருமலை புத்தர்: “இரு தரப்புக்கும் தொடர்பே இல்லை”

Editorial   / 2025 நவம்பர் 19 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கீதபொன்கலன்

"திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் கூறினார்.

 இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர்.ஆனால், பொலிஸாரே மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்,எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

புதன்கிழமை (19) அன்று நடத்திய   செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் ​ே பாதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்

"திருகோணமலை கடற்கரையில் 1952 ஆம் ஆண்டு முதல் மாவட்டத்தின் முதலாவது தர்ம பாடசாலை இயங்கி வந்தது.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் இங்கிருந்த பாடசாலை கட்டிடம் முற்றாக அழிவடைந்தது.அது பின்னர் புனரமைக்கப்படவில்லை.எனினும் நீண்டகாலமாக இதனை புனரமைக்க வேண்டும் என விரும்பினோம்.இந்நிலையில் இம்மாதம் இது தொடர்பில் எமது விகாரையின் நிர்வாக்குழுவின் தீர்மானப்படி அழிவடைந்த கட்டிடத்தை கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 நாங்கள், நீதியை,சட்டத்தை மதிக்கின்றோம்.எமக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்" என கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X