2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அவள்தான் காரணம்

J.A. George   / 2021 மார்ச் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கௌதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர்அளித்த பேட்டியில், “நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை. ஆனால் குரு சிஷ்யன் திரைப்படத்தில் நடித்த பிறகு திரும்பி பார்க்கவே நேரம் இல்லை.

வருடத்துக்கு 15 திரைப்படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 திரைப்படங்களில் நடித்து விட்டேன். அது பெரிய சாதனை. சினிமாவால் வாழ்க்கையில் சில விஷயங்களை இழக்கிறோம் என்று தோன்றியது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருக்கத்தான் அவளுக்கு பிடிக்கிறது.

இத்தனை காலம் சினிமாவில்  நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம். இப்போது அவள் செட்டிலாகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X