2024 மே 18, சனிக்கிழமை

ஆசையை சொன்ன இலங்கை போட்டியாளர்

Editorial   / 2024 மே 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன இந்த சேனலில் தற்போது சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக நடந்து முடிந்த மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை கார்த்திக் நடுவராக பங்கேற்காத நிலையில் இந்த சீசனில் அவர் மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார்.

முதல் இரண்டு வாரங்களுக்கு அறிமுக சுற்று நடைபெற இருப்பதாகவும் முதல் வாரத்தில் 12 போட்டியாளர்கள் பாட அடுத்த வாரம் மீதமுள்ள 12 போட்டியாளர்கள் பாட உள்ளனர். இந்த நிலையில் முதல் வாரத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, ஓலை பின்னும் தொழிலாளியான பாலமுருகன் மெகா ஆடிஷனில் பாடி நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்திருந்த நிலையில் அறிமுக சுற்றில் பாடும் போது நான் தென்றல் என்ற பாடலை பாடி அசர வைத்துள்ளார். சாதிக்க வயது தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

அதே போல் இலங்கையை சேர்ந்த விஜய் லோஷன் என்ற போட்டியாளர் ஒரு மாலை இளம்வெயிற் காலம் என்ற பாடலை பாடி நடுவர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். கார்த்திக்குடன் சேர்ந்து இதே பாடலை ஒரு லைன் பாட வேண்டும் என்று ஆசைப்பட கார்த்திக்கும் விஜயுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த இன்னொரு போட்டியாளரான இந்திரஜித் பாடி முடித்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்ற பிறகு நடுவர்கள் அவரிடம் உன்னுடைய ஆசை என்ன என்று என்று கேட்க SPB சமாதிக்கு போகணும் என்று சொல்ல கார்த்திக் அதுக்கான ஏற்பாடுகளை நான் செய்து தரேன் என்று வாக்கு கொடுத்து இந்திரஜித்தை உருக வைத்துள்ளார்.

பிரம்மாண்டமான புதிய செட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கார்த்திக், ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இவர்களுடன் 16 ஜூரிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .