S.Renuka / 2026 மார்ச் 09 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.

ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக ரவி மோகன் திடீரென அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த முடிவை ஆர்த்தி எதிர்பார்க்கவில்லை என்றும், இருவரும் மீண்டும் இணைவதற்காக முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் ரவி தனது முடிவில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த பிரிவுக்குப் பிறகு ரவி மோகன் மற்றும் பின்னணி பாடகி கெனிஷா இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இதை மறுத்த ரவி, பின்னர் சில நிகழ்ச்சிகளில் கெனிஷாவுடன் ஒன்றாக தோன்றியதால் இந்த விவகாரம் மேலும் பேசப்பட்டது.
இந்நிலையில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் தொடர்பாக கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரவியை பாராட்டி பேசினார்.

அந்த வீடியோவில் கெனிஷா கூறுகையில்,“ரவி மோகனுக்கு வாழ்த்துகள். நீங்கள் என்ன செய்தாலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் முதல் படத்தை இயக்குவது குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை நான் அறிவேன். பல வருடங்களாக நீங்கள் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தீர்கள். இந்தப் படத்தை இயக்குவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தீர்கள். ஆனால், சில காரணங்களால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. நீங்கள் கடந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். எவ்வளவு நெகட்டிவிட்டி இருந்தாலும் நான் எப்போதும் உங்கள் பக்கமே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “கடந்த வாழ்க்கை” குறித்து அவர் கூறிய கருத்து குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர், வாழ்த்து சொல்லும் போது தேவையில்லாமல் பழைய விஷயங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய போது, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மதிக்கவில்லை என்றும், வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைத்திருந்தார். அந்த கருத்துகள் அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது ரவி மோகன் யோகி பாபுவை வைத்து இயக்குநராக தனது முதல் படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் பூஜை விழா நடைபெற்றது. நடிகராக இருந்து இயக்குநராக மாறும் ரவியின் புதிய முயற்சியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026