A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவின் மகள் நைனிகா, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில், அமலா பாலின் மகளாக நடித்து அசத்தினார்.
நைனிகாவின் நடிப்பு திறமையை பார்த்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறன.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்து ‘தெறி’ படத்தின் வெற்றி நிகழ்ச்சியின் போது, தனது மகள் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை மீனா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் படம் இதுவரை வெளிவராத புகைப்படம் என கூறப்படுகிறது.
மேலும் அதனை விஜய் மற்றும் அட்லீக்கு டேக் செய்துள்ளார். இது குறித்து மீனா, தெறி சக்சஸ் பார்டியில் எடுத்தது எனத் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடிகை மீனா நடித்து வருகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
23 minute ago