2025 மே 01, வியாழக்கிழமை

இயக்குனர் பாலா பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மமிதா பைஜு!

Freelancer   / 2024 மார்ச் 01 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


வசூலில் சாதனை படைத்து வரும் மளையாள திரைப்படமான 'பிரேமலு'வில் நடித்து சர்வதேச அளவில் ஏகப்பட்ட இரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை மமிதா பைஜு. கடந்த பெப்ரவரி மாதம், காதலர் தினத்தை குறி வைத்து வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியாகவுள்ள, 'வணங்கான்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்த நடிகை மமிதா பைஜுவை, இயக்குனர் பாலா அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாக அத்திரைப்படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் சர்ச்சைக் கிளம்பியது.
இயக்குனர் பாலா, தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அடிப்பார் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகின்றது. ஆனால், பாலா பட்டறையில் தீட்டப்படும் நடிகர்கள் சினிமாவில் சிறந்து விளங்குவார்கள் என்பதால், அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. முன்னணி நடிகர்கள் பலரும், பாலா படத்தை தவிர்க்க காரணமும் அவர் திட்டுவார், அடிப்பார் என்பதால் தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 
இந்நிலையில் இயக்குனர் பாலா, மற்றும் நடிகை மமிதா பைஜு தொடர்பான சர்ச்கை பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில், சமீபத்தில் மமிதா பைஜு இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இயக்குனர் பாலா தன்னை தகாத முறையில் நடத்தவில்லை எனவும், தன்னை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லையனெவும், அது தவறான சித்தறிப்பு எனவும் கூறினார். 
மேலும், "நான் பேசிய பெரிய பேட்டியில் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துப் போட்டு அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டனர். அதை நான் முழுமையாக மறுக்கிறேன். பாலாவுடன் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன். அவருடைய துணை இயக்குனர்கள், என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். மற்றவர்களுக்கு கொடுத்ததை விட அதிகமான வாய்ப்பை எனக்கு பாலா கொடுத்தார்" என்றார். 
வணங்கான் படத்தில் இருந்து விலக காரணம் என்ன என்ற கேளவிக்கு, "நடிகர் சூர்யா விலகியதும் மீண்டும் அந்த படம் எப்படி உருவாகும் என்கிற எண்ணம் இருந்தது. தவிர மறுபடியும் ஒரு 6 மாத காலம் கால்ஷீட் தேவைப்படும் என்றனர். ஏற்கனவே ஒரு படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கிய நிலையில், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன்" என மமிதா பைஜு விளக்கம் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .