2025 மே 14, புதன்கிழமை

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இனப் பிரச்சினையை மையமாக வைத்து சில திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு தணிக்கை கெடுபிடி மிகவும் அதிகமாக இருந்ததால் பல வெளிப்படையான காட்சிகள் அந்தப் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காததால் அந்த திரைப்படங்களைப் பற்றிய அதிகமான கவனமும் ரசிகர்களிடம் ஏற்படவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படம் மட்டுமே ரசிகர்களைச் சென்று சேர்ந்தது.  

இப்போது தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்க “ஒக்கடு மிகிலாடு” என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அஜய் ஆன்ட்ரூ நுத்தகி என்பவர் இயக்கும் இந்த திரைப்படம் “விடுதலைப் புலிகள், இலங்கை அரசு ஆகியோருக்கு இடையே நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய திரைப்படம்” என படக்குழுவினரே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.   

மஞ்சு மனோஜ், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். மஞ்சு மனோஜின் அப்பா தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இத்திரைப்படத்தின் முதல் பார்வையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்கள். அதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரைப்படத்தின் நாயகன் மஞ்சு மனோஜ், “தமிழ்ப் புலிகள் மற்றும் இலங்கை, உண்மைக் கதையின் அடிப்படையில்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இத்திரைப்படத்தில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .