Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-க்கு பிறகு மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு தனது நடிப்புத் திறனால் அனைவரையும் கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ ரோல் மட்டுமல்லாமல் வில்லன், இளைஞர், முதியவர் என்று பலவித கேரக்டர் ரோல்களை பக்காவாக செய்யக்கூடிய திறன் படைத்தவர்.
இதுவரை எந்த ஒரு நடிகையோடும் கிசுகிசுக்கப்படாத விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் தற்போது இணைத்து பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரம்மி தர்மதுரை கா.பெ ரண சிங்கம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நெருக்கமாக சேர்ந்து நடித்து இருந்தார்கள்.
இதற்கு காரணம் இருவருக்கும் இருக்கும் நட்பை தாண்டிய உறவு தான் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. இந்த விவகாரம், விஜய் சேதுபதி மனைவி ஜெர்சிக்கு தெரிய வர குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்து விவாகரத்து வரை சென்று விட்டார்களாம்.
இந்த சூழ்நிலையில் விஜயசேதுபதி தன் மனைவியிடம் சத்திய வாக்கு ஒன்றினை கொடுத்ததின் காரணமாக மனைவி சமாதானம் ஆகி இருவரும் சேர்ந்து வாழ்வதாக பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் இது பற்றி கேள்வி எழுப்பிய போது இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தது உண்மைதான். இதன் மூலம் குடும்பத்தில் சந்தேகம் ஏற்பட்டு குழப்பம் வந்துவிட்டது என விஜய் சேதுபதியே கூறியிருக்கிறார். M
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago