Ilango Bharathy / 2021 ஜூன் 30 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைய தளபதியென ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் 65 ஆவது படம் ‘பீஸ்ட்’.
நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இத்திரைப் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகப் புதிய தகவலலொன்று வெளியாகியுள்ளது.
இக் கூட்டணி உறுதியானால், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
31 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
54 minute ago
1 hours ago