Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
80களில் பலரின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தற்போது நடிகை, அரசியல் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், தொகுப்பாளினி எனப் பல்வேறு அவதாரங்களுடன் பல இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.
அண்மைக்காலமாக குஷ்பு தனது உடல்எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் காட்சி தருகிறார். இதுகுறித்த புகைப்படங்களும் கடந்த சில தினங்களாக சமூக வலைத் தளங்களில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தது.
இந்நிலையில் குஷ்பு, தனது உடல்எடையைக் குறைத்தது எவ்வாறு என்ற ரகசியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நடைப்பயிற்சி ஒன்றுதான் சரியான தீர்வு. அதேபோல உடல்எடையை குறைப்பதற்குச் சரியான வழிமுறையும் நடைப்பயிற்சிதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது பதிவு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் “அண்ணாத்த“ திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
18 minute ago
20 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
35 minute ago
1 hours ago