George / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் எழில் இயக்க, நடிகர் உதயநிதி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டி.இமான் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, சுசீந்திரன் மற்றும் கௌரவ் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படங்களில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமானார்.
இதில் எந்த திரைப்படத்தில் முதலில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அண்மையில் எழில் இயக்கும் ஒரு திரைப்படத்திலும் உதயநிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சுசீந்திரன், கௌரவ் திரைப்படங்களில் இதுவரை உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
கௌரவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் உதயநிதியுடன் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .