2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஊர்வசி ரவுதெலாவுக்கு எலும்பு முறிவு

Editorial   / 2024 ஜூலை 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழில் சரவணன் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இப்போது பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் 109 -வது படமான இதை பாபி இயக்குகிறார். பாபி தியோல் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

இதன் சண்டைக் காட்சி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஊர்வசிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X