2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

’’என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்துவிட்டேன்’’

Mayu   / 2026 மே 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளங்களில் தன்னை நோக்கி முன்வைக்கப்படும் கேலிகள் (Trolls) மற்றும் விமர்சனங்கள் குறித்து பாலிவுட் நடிகை சாரா அலிகான் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், சமூக ஊடக விமர்சனங்கள் உங்களின் மனநலனைப் பாதிக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்:

"சமூக வலைதள விமர்சனங்களால் நான் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னால் அது பொய். நான் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறேன். ஒரு கலைஞராக நான் செய்யும் எல்லாமே எனது ரசிகர்களுக்காகத்தான். அவர்களை நான் ஏமாற்றமடையச் செய்யும்போது எனக்குள் பெரும் வருத்தம் ஏற்படுகிறது." எனத் தெரிவித்தார்.

திரையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் மக்களின் கருத்துக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகக் குறிப்பிட்ட சாரா, தற்போது தனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

"நமக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என்பதை எனது சினிமா வாழ்க்கையில் சற்று தாமதமாகத்தான் கற்றுக்கொண்டேன். நாம் செய்யும் வேலையை முழுமையாக ரசித்து, நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துவிட்டால் ஒருவித நிம்மதி கிடைத்துவிடும். 'என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்துவிட்டேன்' என்ற திருப்தி இருந்தால், தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதில்லை" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாரா அலிகான் நடிப்பில் உருவான 'பதி பத்னி அவுர் வோ தோ' (Pati Patni Aur Woh 2) என்ற காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, ரகுல் பிரீத் சிங் மற்றும் வாமிகா கபி ஆகியோருடன் இணைந்து சாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .