Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை மனோரமாவுடன் நடந்த இறுதிச் சந்திப்பின் நிமிடங்களை நினைவுகூர்ந்து நடிகர் கமல்ஹாசன் குரல் பதிவு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
'9 நாள்களுக்கு முன்னால் மூத்த பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் ஒரு விழாவில், நடிகை மனோரமா, 65 ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி எழுதிய கவிதை நாடகம் ஒன்றை ஏற்ற, இறக்கங்களுடன் குறிப்புகள் எதுவுமின்றி அமர்ந்தபடி நடித்துக் காட்டினார்.
அடுத்து கொமடி என்று சென்னை தமிழில் சிறுகதை ஒன்றை சொல்லி நெகிழ்வித்தார். அப்போது மனோரமா என் பக்கம் திரும்பி, 'நல்லா இருந்ததா' என்று கண்ணால் கேட்டார். என் நிறைந்த கண்கள் அந்த கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கும் என நான் நம்புகிறேன்.
என் நகைச்சுவை நடிப்பின் தாய், தந்தையர் என மனோரமாவையும், நாகேஷையும் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதையே என் அனைவரின் தலைமுறையும் சொல்லும்' என்று கமல் ஹாசன் தனது குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீரை வரவழைக்கும் கமல் ஹாசனின் உருக்கமான குரல் பதிவு இதோ உங்களுக்காக!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025