2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

’எலக்சன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.

'எலக்சன்' என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலக்சன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .