J.A. George / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் வெளியாகிய நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை விக்னேஷ் சிவன் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி படங்களையே இயக்கி வந்த நிலையில் அஜித்தை வைத்து அவர் இயக்கும் 'ஏகே 62’ படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.
இந்த நிலையில் 'ஏகே 62’ படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகிய இரண்டும் இருக்கும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் என்னென்ன அப்டேட்டுகள் வெளிவரும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025