2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

ஒரே காரில் வந்தது ஏன் தெரியுமா?

Editorial   / 2026 மார்ச் 09 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வரவேற்புக்கு வந்த விஜய் ஏன் த்ரிஷாவுடன் ஒரே காரில் சென்றார் என்று அவர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அதை கேட்டவர்களோ, இப்படியொரு விஷயம் இருப்பது நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள்.

விஜய் , த்ரிஷா: கல்பாத்தி சுரேஷ், மீனாட்சி தம்பதியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஒரே காரில் வந்தார்கள். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர். மேடையில் சேர்ந்தே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள். பின்னர் இருவரும் ஒரே காரில் கிளம்பிச் சென்றார்கள்.

விஜய் தனக்கு உண்மையாக இல்லை என்று கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில் அவர் இப்படி செய்தது பெரும் சர்ச்சையானது. அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, இதில் தவறு எதுவும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. விஜய்யின் நெருங்கிய தோழி த்ரிஷா. அதனால் இருவரும் சேர்ந்து வந்திருப்பார்கள். ஒரே நிறத்தில் உடை அணிவது ஒரு குற்றமா?. இதை போய் பெரிதுபடுத்திக் கொண்டு என்றார்கள்.

 இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், விஜய், த்ரிஷா கிருஷ்ணன் சேர்ந்து ஒரே காரில் பயணம் செய்தது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறார். தளபதியின் கார் சாலையில் வந்தாலே அவரை பின்தொடர்ந்து நிறைய பேர் வருகிறார்கள். அதனால் அவர் தன் காரில் வந்தால் நிறைய பேர் பின்தொடர்வார்கள் என்று தான் த்ரிஷாவின் காரில் பயணம் செய்தார் என அந்த பெண் அளித்த விளக்கம் வைரலாகிவிட்டது. விஜய்க்கு இது போன்ற ரசிகைகள் இருக்கும் வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. விளக்கம்னா இது தான் பலே விளக்கம். அந்த பெண்ணின் கணவரை பார்க்க ஆசையாக இருக்கிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

மேலும் தன்னை பற்றி பரவியிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கவும் தான் த்ரிஷாவை அழைத்துக் கொண்டு வந்தார் எங்கள் அண்ணன் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையே என் விவாகரத்து வழக்கால் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அது அவ்ளோ ஒர்த் இல்லை என்று விஜய் தெரிவித்தது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

 வீட்டில் இருக்கும் பெண்ணை மதிக்காத விஜய் தான் தமிழக பெண்களை பாதுகாக்கப் போகிறாரா என்று அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கட்சி துவங்கிய விஜய் தற்போது தான் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடவிருக்கிறார். முதல் தேர்தல் தான் என்றாலும் நேரடியாக முதல்வராகிவிடுவோம் என்று அவரும், தவெகவினரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .