2025 மே 05, திங்கட்கிழமை

ஒரே மாதத்தில் 4 படங்கள்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய 4 திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளன. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செப் 10ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியன்று விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மறுதினமே இப்படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது.

இதுதவிர விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் வருகிற 17ஆம் திகதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X