Editorial / 2020 மே 03 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக புகழ்பெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவான ஒஸ்கார் திரைப்பட விருது விழாவின் 93ஆவது விழா அடுத்த வரும் பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் நடைமுறைகளில் பல மாற்றங்கள் வர இருப்பதால் அந்த மாற்றம் ஒஸ்கார் விருதிலும் எதிரொலிக்கிறது.
இந்த வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது.
ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் திரைப்படங்கள் திரையரங்குகளில் குறைந்தபட்சம் 7 நாட்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமான விதிமுறையாகும்.
இதனால் இணையதளத்தில் வெளியாகும் படங்களை ஒஸ்காருக்கு அனுப்ப முடியாத நிலை இருந்தது. தற்போது ஒஸ்கார் விதிமுறையில் சில தற்காலிக மாற்றங்களை விருது குழு அறிவித்துள்ளது.
அதன்படி விருது தெரிவுக்கு இணையதளத்தில் வெளியாகும் திரைப்படங்களும் தகுதி பெறுகிறன. எனினும், அவை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்ட திரைப்படங்களாக இருக்க வேண்டும். இணையத்தில் வெளியிடுவதற்கென்றே தயாரிக்கும் படங்களாக இருக்ககூடாது என்று ஒஸ்கார் விருது குழு அறிவித்துள்ளது.
எனினும், இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது தான் கொரோனா வைரஸ் பிரச்சினை சீரானதும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விருதுகளின் எண்ணிக்கையையும் குறைக்க விருதுக்குழு முடிவு செய்திருக்கிறது
40 minute ago
44 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
1 hours ago
4 hours ago