J.A. George / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகையை எதிர்த்து நடிகை ஓவியா Go Back Modi என பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த 14ம் திகதி தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்குமுன்னதாக மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியா GoBackModi என பதிவிட்டிருந்தார்.
இவரது ட்வீட் வைரலான நிலையில் இவர் மீது சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஓவியாவின் ட்வீட்டிற்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”#வாயைமூடு Podi. சும்மா ரைமிங்கா இருக்கானு சொல்லி பார்த்தேன்.
உன்னை அவமதிக்க ஒன்று இல்லை. பிக்பாஸ் சீசனை நான் அசை போடுகிறேன். நான் எப்போதும் உனக்கு எதிரானவள்தான். நான் சரியானதை தேர்வு செய்திருக்கிறேன், இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி.
நான் திமுகவை விமர்சித்து வருவதால் ஓவியாவை இது போல் செய்ய தூண்டியுள்ளார்கள்” என காயத்ரி தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago