Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அமலாபோல் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். அவர் நடித்திருக்கும் திரைப்படம் பசங்க 2. இது திருமணத்துக்கு பிறகு நடித்ததுதான். இந்தப் திரைப்படத்துக்கு பிறகு அமலாபோல் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கும் ஆசையில் இருப்பது பசங்க 2 பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்பட்டது.
விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது 'இந்தப் திரைப்படத்தில் அமலாபோல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அமலாபோல் பல பேட்டிகளில் சூர்யா சாருடன் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இதனை மனதில் வைத்துக் கொண்டு இயக்குநர் விஜய்யை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.
அவர் 'அமலா நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. நிறைய பேர் கேட்டாங்க முடியாது என்று சொல்லிட்டேன்' என்றார். அமலாவை கதை கேட்க சொல்லுங்க அப்புறம் முடிவு பண்ணுங்க என்றேன். அதற்கு சம்மதித்தார். கதை, அமலாபோலுக்கு பிடித்திருந்தது. சூர்யாவுடன் நடிக்கும் ஆசையும் நிறைவேறுவதால் நடிக்க ஒப்புக் கொண்டார். இனி அவர் தாரளமாக வீட்டில் போய் இருக்கலாம் என்றார்.
பிறகு பேச வந்த அமலாபோல் 'இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது அமலாபோலுவுக்கு இந்தத் திரைப்படம் நல்ல தொடக்கமாக இருக்கும் என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் என்னை வீட்டில் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டார். இந்தத் திரைப்படத்தில் நான் நடிக்க விஜய்கூட கொஞ்சம் யோசித்தார். நான்தான் கதை நன்றாக இருக்கிறது, அதுவும் குழந்தைகள் திரைப்படம் என்று நடித்தேன்' என்றார்.
அமலாவின் பேச்சை கவனிக்கும்போது அவா மீண்டும் நடிக்கும் ஆசையில் இருப்பது தெளிவாக தெரிகிறது இல்லையா...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago