Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டள்ளது.
‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்இ நேற்றிரவு (22) ‘கங்குவா’ படத்தின் சண்டைகாட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. M
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago