2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கட்டப்பாவின் இரகசியம் தெரிந்த 4 பேர்

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது திரைப்படம் பார்த்தவர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்த ஒரே கேள்வி ராஜவிசுவாசம் உள்ள கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்? என்பதுதான்.

இந்த கேள்விக்கு விடை தெரியாமல் கடந்த ஒரு வருடமாக இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கேள்விக்கு விடையளிக்கும் முக்கிய காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படப்பிடிப்பு மிகவும் இரகசியமாக நடந்ததாகவும், இந்த இரகசியம் தற்போது நான்கு பேர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்த திரைப்படத்தின் கதாசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், பிரபாஸ் மற்றும் சத்யராஜ் ஆகிய நால்வர்தான் இந்த இரகசியம் தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இன்னும் பின்னணி இசையமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளருக்கு  தெரிய வாய்ப்பு உள்ளது. இவர்களை தவிர இந்த இரகசியம் வேறு யாருக்கும் தெரியாது என்பதால் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X