Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சேகர் கம்முல்லா இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான படம் 'லவ் ஸ்டோரி'. நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்த படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்திருந்தனர். முழு நீள காதல் படமாக இந்த படம் அமைந்திருந்தது.
இந்த படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைத் தாண்டி இருவரும் காதலிப்பதாக இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது. இத்திரைப்படத்தில் சாய் பல்லவியின் நடனம் மற்றும் நடிப்பிற்கு பெரும் பாராட்டுகள் கிடைத்தன.
சாய் பல்லவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
காதலர் தினமான வரும் பெப்ரவரி 14ஆம் திகதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் சாய் பல்லவி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ள சாய் பல்லவி தற்போது அமீர் கான் தயாரிப்பில் உருவாகும் ஏக் தின் படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. கதாநாயகனாக ஜூனைத் கான் நடித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago