Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. இவர் தமிழ் சினிமாவில் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, "கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் 'குப்பன்' என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடியுள்ளார்.இந்த நிலையில், நடிகை கேத்ரின் தெரசா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, நடிகை கேத்ரின் தெரசாவிடம் நீங்கள் கதையே இல்லை என்றாலும் எந்த நடிகருடன் நடிப்பீர்கள்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "கதையே இல்லை என்றாலும் அஜித் சாருடன் நடிக்க ஆசை என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் அஜித் சாரின் 'குட் பேட் அக்லி' படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றும் விரைவில் பார்க்க போவதாகவும் கூறியிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .