Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4ஆவது முறையாக இணையவுள்ளனர். ஏற்கெனவே இவர்களின் கூட்டணியில் உருவான ‘துப்பாக்கி, கத்தி, சர்க்கார்’ என மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.
தற்போது மீண்டும் இணையும் திரைப்படமானது துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படும் நிலையில், திரைப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா, தற்போது கார்த்தியின் சுல்தான் திரைப்படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகிறார்.
ஏற்கெனவே அவர் விஜய் திரைப்படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ராஷ்மிகாவும் தனது பேட்டிகளில் அதனை வெளிப்படுத்தி வருகிறார்.
விஜய் 65 திரைப்படத்திலாவது ராஷ்மிகாவின் கனவு நிறைவேறுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .