2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கமல்ஹாசனாக இருந்தாலும் குற்றம் குற்றமே

George   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுர் பிரபலமானாலும் சரி உலக பிரபலமானாலும் சரி யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். அதிலும் தமிழில் பதிவிடும் போது தவறுசெய்தால்... ஆழ்வார்பேட்டை ஆண்டவா என கமல் இரசிகர்கள் அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தாலும் தமிழில் தட்டச்சு செய்து டுவிட்டரில் பதிவிடும் போது, பிழையாக தமிழை பதிவுசெய்தால் அது கமல்ஹாசனாக இருந்தாலும் குற்றம் குற்றம் தான். 

இந்தியத் திரையுலகில் பல புதியத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன், தமிழில் தட்டச்சு செய்யும் எளிமையான விடயத்தை இன்னும் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. புரியாமலேயே பேசுவார் என அவர் பேசுவதைப் பற்றிப் பலர் கிண்டலடிப்பது வழக்கம். அந்த விதத்தில் தற்போது அவரது பதிவுகளை கிண்டலடிப்பதற்கு முன் கமல்ஹாசன் மாற்றிக் கொள்வது நல்லது.

டுவிட்டரில் கடந்த மாதம் இணைந்த போது கமல்ஹாசன் முதலில் பதிவிட்ட தமிழ் பதிவில் தவறு வந்ததற்கு 'என் தாந்தோன்றிச் செயல்படும் கீடிழயசனஐ மன்னிக்கவும்' எனக் கூறி தப்பித்துக்கொண்டார்.

இந்நிலையில்,  எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றி கமல்ஹாசன்,சனிக்கிழமை இட்ட பதிவில் வந்த எழுத்துப் பிழைகளை டைப் தவறுகள் எனச் சொல்லி மீண்டும் ஒரு முறை அவர் தப்பித்துக் கொள்ளக் கூடாது. திகில் என்பதற்கு தகில் என்றும், அறியாமல் என்பதற்கு அரியாமல்  என்றும், பெரியவர் என்பதற்குப் பேரியவர் என்றும் பதிவிட்டிருப்பதைப் பார்த்தால் யாருக்கு கோபம் வராமல் இருக்கும்.

ஒன்று உங்களுக்காக தட்டச்சு செய்து கொடுப்பவரை மாற்றுங்கள், அல்லது உங்களுக்காக எழுதிக் கொடுப்பவரை மாற்றுங்கள், அல்லது நீங்களே உங்கள் கைகளால்தான் தட்டச்சு செய்கிறீர்கள் என்றால் நல்லதொரு எளிய மென்பொருளை பயன்படுத்துங்கள். அதுவரை தமிழில் தவறுடன் எந்த பதிவையும்போட்டு விடாதீர்கள். உங்கள் பதிவுகளை பதிவேற்றும் முன் கொஞ்சம் கவனித்தால் நல்லது கமல்ஹாசன் அவர்களே!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .