Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கனகா. இத்திரைப்படம் மாபெறும் வெற்றியை அடையவே, அடுத்து ரஜினியுடன் ’அதிசய பிறவி’ உட்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
இருப்பினும் கடந்த 2000ம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்த திரைபடத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளமொன்றில் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.
குறித்த வீடியோவில் அவர் மேலும் தெரிவித்ததாவது” ‘கடந்த பல ஆண்டுகளாக நான் நடிக்கவில்லை. தற்போது ட்ரெண்ட் எல்லாம் மாறிவிட்டது. தற்போதைய டிரெண்ட்டை நான் கற்று வருகிறேன். எனக்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் நான் இப்போதைய சினிமாவை கற்றுக் கொள்வேன்” என்றார்.
இவ் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில், தமிழ் திரையுலகினர் கனகாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பைக் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago