Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விவரம் வெளியே தெரியும் முன்பே அதிலிருந்து குணமடைந்துள்ளார் நடிகர் விஷால்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் ஒரே வாரத்தில் குணமடைந்துள்ளாராம்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தையும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மேலாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது. இதனால் மூவரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டோம். அதன் பலனாக ஒரே வாரத்தில் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம் என்ற தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .