2025 மே 14, புதன்கிழமை

கரிசல்காட்டு கதையில் மீண்டும் ராதிகா

George   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யதார்த்த நடிகையாக, நீண்டகாலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ராதிகா, இப்போது அம்மா வேடங்களில் தனது அடுத்த சுற்றை அமோகமாக தொடங்கியிருக்கிறார்.

நானும் ரௌடிதான், தங்கமகன், தெறி ஆகிய திரைப்படங்களில் அம்மாவாக நடித்தவர், தர்மதுரை திரைப்படத்தில் மீண்டும் அம்மாவாக நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவின் திரைப்படங்களில் நடித்தபோது கரிசல்காட்டு கதைகளில் தொடர்ந்து நடித்து வந்த ராதிகா, கிழக்கு சீமையிலே திரைப்படத்துக்குப் பிறகு அந்த மாதிரி கதைகளில் நடிக்கவில்லை.

அந்த வகையில், சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இப்போது தர்மதுரைக்காக மீண்டும் கரிசல்காட்டு கதையில் மதுரை வட்டார தமிழ் பேசி மனதை தொடும் வகையில் நடித்துள்ளாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .