Editorial / 2026 ஜனவரி 04 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாலையை கடக்கும் போது வாகனம் மோதி கில்லி பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி படுகாயமடைந்தார். அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டதாகவும் இருவரும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் ஆஷிஷும் ரூபாலியும் சாலையை கடக்கும் போது இந்த விபத்து நடந்தது. இருவரும் சாலையை கடக்கும் போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது.
இதில் ஆஷிஷ், ரூபாலி, அந்த பைக்கை ஓட்டி வந்த நபர் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மக்கள் கூடினர். அவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆஷிஷ் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: நான் ஒரு மோசமான சூழலில் லைவ் வீடியோ செய்கிறேன். சில விஷயங்களை சொல்வதற்காகவே லைவில் வந்துள்ளேன்.
நிறைய செய்தி சேனல்களில் நான் விபத்தில் சிக்கியதாக வந்தவற்றை கவனித்தேன். ஆம், நிஜமாகவே நான் விபத்தில் சிக்கிக் கொண்டேன்.
நானும் ரூபாலியும் சாலையைக் கடக்கும்போது பைக் மோதியது. ரூபாலி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம். கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சிறிய விபத்து. எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ மூலம் கூறியுள்ளார்.
விபத்துக்கு பிறகு ஆஷிஷே நடந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு நேர்ந்த விபத்து பெரிய விபத்தல்ல என்றும் அதை யாரும் பெரிதாக்க வேண்டாம் என்றும் ஆஷிஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பைக் ஓட்டுநரும் நலமாக இருக்கிறார். இதுகுறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் என்று ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ மூலம் கூறியுள்ளார்.
நடிப்பில் பெரும் முத்திரை பதித்த ஆஷிஷ் வித்யார்த்தி, தற்போது ஒரு யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார். 2023-ல் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பரூவாவும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு முன்பு, ஆஷிஷ் வித்யார்த்தி பிலு வித்யார்த்தியை மணந்திருந்தார். சுமார் 22 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2022-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, கில்லி படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்து பிரபலமானார்.
ஆஷிஷின் மனைவி ரூபாலி பேஷன் டிசைனராக இருந்து வருகிறார். அவருக்கு 50 வயதாகிறது. ரூபாலிக்கு ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கிறார். ஆஷிஷிற்கு 63 வயதாகிறது. இந்த வயதில் திருமணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago