Mithuna / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து, சூர்யாவுடன் என்.ஜி.கே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை புதன்கிழமை (21) திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர்.
திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .