Ilango Bharathy / 2021 ஜூன் 22 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக யோகா தினமான நேற்று(21) தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தாம் யோகா செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தான் யோகா செய்த புகைப்படங்களையும், வீடியோவொன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறிப்பாக அவர் யோகா செய்யும் மூன்று நிமிட வீடியோவானது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நேர்த்தியாக அவர் யோகா செய்யும் முறையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
இப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது” வெளியில் நடப்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் கட்டுப்படுத்தலாம். இனிய சர்வதேச யோகா நாள்! இந்த அழகான பயணத்தின் மூலம் என்னை அழைத்துச் சென்ற எனது குருவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.


33 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
1 hours ago