2025 மே 05, திங்கட்கிழமை

குஷ்புவுக்கு கொரோனா

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரண்டாம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நடிகையும், நடன இயக்குனருமான ஷோபனா கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நடிகையும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X