J.A. George / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் கௌதம் மேனன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் ‘அன்பு செல்வன்’ என்ற திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அத்துடன், வினோத் குமார் இயக்கி உள்ள இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனன் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்த நிலையில், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கௌதம் மேனன் ‘அன்பு செல்வன்’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுத்தார்.
இதையடுத்து ‘அன்பு செல்வன்’ படக்குழுவினர் கௌதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு திரைப்படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை என்றும், திரைப்படத்தின் பெயர் “அன்பு செல்வன்” என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்கு காரணம் என்றும் தெளிவுப்படுத்தினர்.
இதையடுத்து “அன்பு செல்வன்” திரைப்படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார். அதில், “ஜெய் கணேஷ் இயக்கத்தில் ‘வினா’என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, 2018ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு பணிகள் நடக்கவில்லை.
தற்போது வினோத் குமார் இயக்கத்தில் திரைப்படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே ‘அன்புசெல்வன்' திரைப்படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
14 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago