2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குழந்தை படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை

George   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பானுவுக்கு அண்மையில்  பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையின் நிழற்படத்தை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பானு வெளியிட்டுள்ளார்.

தான் கர்ப்பமாக இருந்த நிழற்படத்தையும் கணவருடன் குழந்தையை கொஞ்சுவது போன்ற நிழற்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகையான பானு,  மலையாள, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முக்தா என்ற பெயரிலும், தமிழில் பானு என்ற பெயரிலும் அவர் நடித்துள்ளார்.

இயக்குநர் ஹரி  இயக்கத்தில் விஷால் ஜோடியாக தாமிரபரணி திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். இறுதியாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு நடிகை பானுவுக்கும் மலையாள பாடகி ஒருவரின் தம்பியான ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு  முழுக்குப் போட்டு குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X