J.A. George / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சமந்தா அண்மையில் மும்பை சென்று தனது கூந்தல் அழகை மெருகேற்றியுள்ளார். அதன்பிறகு அவரது லுக் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சமந்தா, நடிகை வரலட்சுமி மற்றும் தனது ஆடை வடிவமைப்பாளர் நீரஜா ஆகியோர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதேவேளை, சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து ’யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026