Editorial / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமந்தாவை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் ‘சென்னை ஸ்டோரி’ படத்திலிருந்து விலகினார். இதையடுத்து விரைவில் படத்தின் புதிய நாயகி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி (Timeri N.Murari) எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலப் படமொன்று உருவாகிறது. இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘சென்னை ஸ்டோரி’ என்று தலைப்பிட்டு பணிகளைத் தொடங்கினார்கள். இதனை பாஃப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக முதலில் சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். அதற்குப் பிறகு தேதிகள் பிரச்சினையால் படத்திலிருந்து விலகினார்.
பின்பு அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். தற்போது தேதிகள் பிரச்சினையை முன்வைத்து ஸ்ருதிஹாசனும் படத்திலிருந்து விலகியிருக்கிறார். நாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். ’சென்னை ஸ்டோரி’ மட்டுமன்றி ஆத்வி சேஷுடன் நடித்து வந்த ‘டாகோயிட்’ படத்திலிருந்தும் ஸ்ருதிஹாசன் விலகியிருக்கிறார்.
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
1 hours ago