2025 மே 05, திங்கட்கிழமை

சம்பளமே வேண்டாம் என்ற விஜய் சேதுபதி

Freelancer   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியிடம் ஒரு குறும்படத்திற்கான யோசனையை சொல்லியிருக்கிறார் பாக்கியராஜ். 

கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். 

இதைப்போல இன்னும் நான்கு குறும்படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து  அதை ஒரு அந்தோலஜி படமாக திரையரங்கத்திலோ, ஓடிடி தளத்திலோ வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் பாக்யராஜ். 

விஜய் சேதுபதி கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், முகிழ், விக்ரம், கடைசி விவசாயி, மாமனிதன், மும்பைகார், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய படங்கள் உள்ளன. 

இதுதவிர பாலிவூட்டில் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X